Monday, September 16, 2013

முசாபர் நகரில் நடந்தது என்ன? சிபிஎம் குழுவின் நேரடி ரிப்போர்ட்



பொதுத்தேர்தல் நெருங்குகிறது .பிஜேபியும், சங்பரிவாரும் ,தங்கள் வேலைகளை தொடங்கிவிட்டனர் . மதவெறி கூட்டத்தின் திட்டங்களுக்கு தமிழகத்தில் அதிகம் இடமில்லாமல் போனதற்கு பெரியாரின் பங்கு மிகப்பெரியது . 

நன்றி தீக்கதிர்



Top of Form
மதவெறிக் கூட்டத்தின் கட்டப்பஞ்சாயத்து : சிறுபான்மை மக்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதல்
முசாபர் நகரில்
Bottom of Form
நடந்தது
Top of Form
என்ன? சிபிஎம் குழுவின் நேரடி ரிப்போர்ட்


மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்ட இளம் குழந்தைகளின் சடலங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. மேலும், துண்டம் துண்டமாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலமும் கொண்டுவரப்பட்டிருந்தது.
புதுதில்லி, செப்.16-
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் இந்துத்வா மத வெறி சக்திகளால் பெருமள வுக்கு நடத்தப்பட்ட வெறியாட் டங்களில் சிறுபான்மை மக்கள் கொடூரமான முறையில் தாக்கப் பட்டுள்ளனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆய்வுக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
பரவும் வன்முறையை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உட னடி நடவடிக்கை எதுவும் உருப் படியாக மேற்கொள்ளவில்லை என அக்குழு கண்டனம் தெரி வித்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதக்கலவரத்தால் பாதிக்கப் பட்ட முசாபர்நகருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப் பினர் சைதுல் ஹேக், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுபா ஷினி அலி, உத்தரப்பிரதேச மாநில செயற்குழு உறுப்பினர் டி.பி.சிங் மற்றும் முசாபர் நகர் மாவட்ட கட்சித் தலைவர்கள் கடந்த செப்டம்பர் 14 சனிக் கிழமையன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஆகஸ்ட் 27 அன்று கொல்லப்பட்ட சச்சின் மற்றும் கௌரவ் ஆகியோரின் குடும்பத்தினரையும், செப்டம் பர் 7 அன்று கொல்லப்பட்ட செய்தியாளர் ராஜேஷ் வர்மா வின் குடும்பத்தாரையும் மற்றும் வன்முறையால் கொல்லப்பட்ட வர்களின் குடும்ப உறுப்பினர் களையும் சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சிக் குழுவினர் கால்நடை களையும், உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக் கப்பட்டிருந்த நூற்றுக்கணக் கானவர்களையும் சந்தித்தனர். பின்னர் சைதுல் ஹேக் மற் றும் சுபாஷினி அலி ஆகியோர் செய்தியாளர்களிடையே கூறிய தாவது:
பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் இளம் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவது என்பது இரு சமூகத்தினருக்கும்இடையே பெரும் பிரச்சனையாக உருவாகி இருந்திருக்கிறது. இப்போது நடைபெற்ற சம்பவங்களில் வன் முறையில் ஈடுபட்டவர்கள் இரு சமூகத்திலும் உள்ளனர். இப் பிரச்சனை என்பது கல்லூரி மற் றும் பள்ளிகளுக்குச் செல்லும் பெண்களைத்தான் கடுமையாகப் பாதித்துள்ளது.
துரதிர்ஷ்டவச மாக, இப்பிரச்சனையை இந்துத் துவா சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன; மதவெறித் தீயை கொளுந்துவிட்டெரியச் செய்தன;முசாபர் நகரில் கடந்த செப் டம்பர் 27 அன்று ஷாநவாஸ் என் பவர் தங்களுடைய தங்கையை கிண்டல் செய்ததாகவும் அதன் காரணமாகவே சச்சின், கௌ ரவ் ஆகியோர் அவருடன் மோத லுக்குச் சென்றதாகவும், அந்த மோதலில் மூவரும் கொல்லப் பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மை அதுவல்ல.
உண்மை என்ன? : கடந்த செப்டம்பர் 9 அன்று தங்கள் உண்ணா நோன்பை முடிப்பதற்காக மசூதிக்கு வந்த வர்களில், மசூதியின் நுழைவா யிலில் தொழுகை தொடங்கு வதற்குச் சற்றுமுன் இட்ரிஸ் என் பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் பிரதீப், வழக்குரைஞர் ராம் நிவாஸ் மற் றும் கிஷோர் என்று அடை யாளம் காட்டப்பட்டிருக்கிறார் கள்.
பிரதீப் என்ற நபர் , இட்ரிஸ் மகளிடம் சில்மிஷம் செய்திருக் கிறார். அவ்வாறான ஒரு சம்பவத் திற்குப் பின்னர், இட்ரிஸ் அவரது கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆத்திர மடைந்த பிரதீப் மற்றும் கூட் டாளிகளால் இட்ரிஸ் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவமே, முதலில் நடந்த ஆத்திரமூட்டல் கொலை யாகும். எனினும், முஸ்லிம்கள், இட்ரிஸின் கொலைக்காக பழி வாங்கல் எதிலும் ஈடுபடவில் லை.
இதன் பின்னர், செப்டம்பர் 27 அன்று ஒரு இந்துப் பெண் ணை, ஒரு முஸ்லிம் இளைஞர் கிண்டல் செய்த சம்பவம், அதற்கு பழிவாங்கச் சென்று மோதலில் 3 பேர் மரணமடைந்த துயரமும் நடந்துள்ளன.முதல் சம்பவம் நடந்த போதே அரசு நிர்வாகம் சுறு சுறுப்பாக இயங்கி இருந்திருக்கு மானால், தொடர்ந்து நடை பெற்ற கோரமான சம்பவங் களைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என்று தூதுக்குழுவின ரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் திரும்பத் திரும்பக் கூறினார்கள்.
பயங்கரமான தாக்குதல்கள் : பாதிக்கப்பட்டோர் இரு சமூ கத்திலும் இருக்கிறார்கள். எனி னும் உயிர்கள், உடைமைகள், வீடுகள் மற்றும் கால்நடைகள் மிகப் பெரிய அளவில் பாதிப் புக்கு உள்ளாகி இருப்பது சிறு பான்மை முஸ்லீம் சமூகத்தின ருக்குத்தான்.
மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு பவர்கள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் நடைபெற்ற கொலை சம்பவங் கள் எவ்வளவு கொடூரமான முறையில் நடைபெற்றன என் பதை உறுதிப்படுத்தினார்கள். மிகவும் காட்டுமிராண்டித்தன மான முறையில் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்ட இளம் குழந்தை களின் சடலங்கள் மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட் டிருந்தன.
மேலும், துண்டம் துண்டமாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலமும் கொண்டு வரப்பட் டிருந்தது.
யார் பொறுப்பு : மக்களின் உயிருக்கும் உடை மைக்கும் மிகவும் பயங்கர மானமுறையில் பாதிப்பு ஏற்பட் டிருப்பதற்கு அரசாங்கமும், நிர்வாகமின்மையும் தான் பொறுப்பு என்பது மிகவும் தெளிவாகத் தெரிந்தது.
ஒரே நாளில் (27ஆம் தேதி) மூன்று கொலைகள் நடந்துள்ளபோதி லும், அவற்றின் மீது தீர்மானகர மான முறையில் நடவடிக்கை எதுவும் எடுக்காதது ஏன்? என் பதனைப் புரிந்துகொள்ள முடிய வில்லை. மாறாக, 27ஆம் தேதி நடத் சம்பவத்தைத் தொடர்ந்து மிகச்சரியாக நடவடிக்கைகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சி யரும், மாவட்டக் காவல் கண் காணிப்பாளரும் மாற்றப்பட்டு, புதிய நபர்கள் அமர்த்தப்பட் டிருக்கிறார்கள்.
144ஆவது பிரிவு எப்படி அமலாக்கப்பட வேண் டும் என்பது குறித்தோ, வெளிப் படையாகவே ஆத்திரமூட்டல் சம்பவம் நடைபெறும்போது அதனை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்தோ எவ் விதமான தெளிவான பார்வை யும் இல்லை. 27ஆம் தேதிக்குப் பிறகு, 7ஆம் தேதி வரையிலுமே ஒவ்வொரு நாளும் இரு சமூ கத்தில் உள்ள தலைவர்களிட மிருந்தும் ஆத்திரமூட்டும் பேச் சுக்கள், கல்லெறிதல் மற்றும் மோதல்கள் நடைபெற்று வந்த போதிலும், ஒரு சமூகத்தினருக்கு எதிராக மற்றொரு சமூகத்தின ரைத் திரட்டிடும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டபோதி லும், இவற்றிற்கு எதிராக வலு வான முறையில் தலையிட எவ் வித முயற்சியும் மாவட்ட நிர் வாகத்தால் மேற்கொள்ளப்பட வில்லை.
மாவட்டத்தில் 144 ஆவது பிரிவை வலுவாகப் பிர யோகிக்கவும் முயற்சிகள் இல் லை. முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக எம்எல்ஏவான சோம், ஒரு போலி வீடியோ காட்சியை தொலைக்காட்சி அலைவரிசை களில் ஒளிபரப்பு நடவடிக்கை களை மேற்கொண்டார். அந்த வீடியோ காட்சி போலியானது என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அந்த எம்எல்ஏ மீது வலுவானமுறையில் எவ்வித மான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. 7ஆவது மகா பஞ் சாயத்தைத் தடை செய்தபின், அந்தத் தடையை அமல்படுத்திட வும் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.
மதவெறி சக்திகளின் கட்டப்பஞ்சாயத்து : கடந்த சில காலமாகவே இப் பகுதியில் ஆர்எஸ்எஸ்-இந் துத்துவா மதவெறி சக்திகள் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டி ருக்கின்றன என்பதும், வகுப்புக் கலவரத்தை மூட்டக்கூடிய விதத் தில் திட்டமிட்டு சில பிரச்ச னைகளை எழுப்பிக்கொண்டி ருக்கின்றன என்பதும் நன்கு தெரிந்தும் கூட, 27ஆம் தேதி சம் பவத்தை அவை நன்கு பயன் படுத்திக் கொண்டு அதன்பின் நடைபெற்ற ஒவ்வொரு சம்பவத் தையும் அவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு வெறித் தனமான செயல்களில் அவை ஈடுபட அனுமதிக்கப்பட்டன.
கட்டப் பஞ்சாயத்துக்கள் என்ற பெயர்களில் அண்டை மாவட்டங்களிலிருந்து மட்டு மல்ல, உத்தரகாண்ட் மற்றும் ஹரி யானா மாநிலங்களிலிருந்தும் பெரும்பான்மை சமூகத்தினர் அணிதிரட்டப்பட்டனர். மகா பஞ்சாயத்திலும் கூட, கட்டப்பஞ்சாயத்துத் தலை வர்களுடன், பல பாஜக தலை வர்களும் எம்எல்ஏக்களும் மேடைகளில் ஏறி முஸ்லிம் மக்க ளுக்கு எதிராக விஷத்தைக் கக்கி யுள்ளார்கள்.
இரு சமூகத்தின ருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேச முன்வந்தவர்கள் உடனடியாக அமைதிப்படுத்தப்பட்டு ஓரங்கட் டப்பட்டார்கள். வெறித்தனமாகப்
பேசியவர்களை மிகவும் ஆரவாரத் துடன் வரவேற்றுள்ளார்கள். இவை அனைத்தையும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் மவுனிகளாக இருந்து வெறுமனே பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தாங்கள் பயன்படுத்த விருக்கும் ஆயுதங்களையும் உயர்த் திப்பிடித்து பார்வையாளர்கள் மத்தி யில் அச்சுறுத்தி இருக்கிறார்கள். உண் மையில் சொல்லப்போனால் காவல் நிலையத்திற்கு முன்னால் அனைத்துக் காவல்துறையினர் கண் முன்னாலேயே இஸ்ரார் என்பார் கொல்லப்பட்டிருக் கிறார்.
கிராமங்கள் தோறும் வன்முறை : மேற்படி மகாபஞ்சாயத்திலிருந்து திரும்பிய கூட்டத்தினர் ஜௌலி என் னுமிடத்தில் சிலரால் தாக்கப்பட்டனர். இதில் சிலருக்குக் காயங்கள் ஏற்பட் டன. இதனைத் தொடர்ந்து முசாபர் நகரமே தாக்குதலுக்கு உள்ளானது.
மகாபஞ்சாயத்தில் பங்கேற்றவர்கள் அவரவர் கிராமங்களுக்குத் திரும்பிய பின்னர், இதற்குமுன் காலங்காலமாக தங்களுடன் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களைத் தொ டுக்கத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து அவர்கள் முகாம்களுக்குள் அடைக்கலம் புகுவது தொடர்ந்தது.
அரசு உடனே செய்ய வேண்டியது என்ன? : இப்படிப்பட்ட மதவெறி வன் முறையைத் தூண்டிவிட்ட அனை வரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையான நிவாரண நடவடிக்கைக ளைத் வழங்கத் தொடங்கிடவேண்டும்.
கொல்லப்பட்டோர் குடும்பத்தினர் அனைவருக்கும் எவ்விதப் பாகுபாடு மின்றி இழப்பீடு உடனடியாக வழங் கிட வேண்டும்.இயல்புநிலைமை திரும்பி நிர்வா கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தங்கள் வாழ் விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட் டோர் மீண்டும் அவர்களது இடங்க ளில் வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களது பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment